ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி
ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி என்பது தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஓர் அரசு நிதியுதவி பெறும் சட்டக் கல்லூரி ஆகும். இது சட்டத்தில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டில், சிறி ரணதேப் சவுத்ரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முன்முயற்சி மற்றும் நிதி பங்களிப்பு மற்றும் பிற சட்ட வல்லுநர்களின் தீவிர ஒத்துழைப்புடன், கல்லூரியின் முதல் ஆளும் குழுவை உருவாக்கியது. ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி, சவுத்ரி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோகேசு சந்திர சவுத்ரியின் நினைவாக இச்சட்டக் கல்லூரிக்குப் பெயரிடப்பட்டது.
Read article